சுதந்திர போராட்ட வீரர் வஉசி-யின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி டவுனில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது. தமிழ்நாட்டில் தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பது நிதர்சனம்” என்று தெரிவித்தார்.