தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி பேச்சுக்கொடுத்து மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு

நெல்லையில் ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி பேச்சுக்கொடுத்து கவனத்தை திசைதிருப்பி மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி திசைதிருப்பி மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு
ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி திசைதிருப்பி மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு

By

Published : Oct 9, 2022, 7:20 AM IST

திருநெல்வேலி: திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடியைச் சேர்ந்த பத்திரகாளியம்மாள் எனும் மூதாட்டி திசையன்விளையில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து வள்ளியூர் அருகே வரும்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகை மாயமாகி உள்ளதை கண்டு பத்திரகாளியம்மாள் கூச்சலிட்டுள்ளார். உடனே பேருந்தை ஓட்டுநர் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

வள்ளியூர் காவல்துறையினர் அனைத்து பயணிகளையும் இறக்கி விட்டு அனைவரையும் பரிசோதனை செய்தனர். ஆனால் நகை எதுவுமே கிடைக்கவில்லை. தொடர்ந்து பயணிகள் அனைவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் மாஸ்க் அணியும்படி திசைதிருப்பி மூதாட்டியிடம் 11 பவுன் தங்க நகை திருட்டு

பத்திரகாளியிடம் விசாரணை மேற்கொண்ட போது, ”திசையன்விளையில் பேருந்தில் ஏறிய போது மர்ம பெண் ஒருவர் கூட்டமாக இருப்பதால் கரானா நோய் தொற்று ஏற்பட்டுவிடும் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள் என்று தன்னிடம் கூறினார். நானும் பையில் இருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் போட்டேன்” அதற்கு பிறகே நகையை காணவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details