திருநெல்வேலி: பொன்னாகுடி அடுத்த அடை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் ஆறு பேர் சிக்கினர். இதுவரை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக ஆப்பரேட்டர் செல்வம் உயிருடன் மீட்கப்பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இரண்டாவது நாளாக நடைபெற்ற மீட்பு பணியில் நேற்று லாரி கிளீனர் முருகன் உடல் மீட்கப்பட்டது. அந்த வகையில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று(மே 17) மூன்றாவது நாளாக மீட்புப் பணி நடைபெற்றுவருகிறது.