தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - Deer hunting in Tenkasi\

ஆலங்குளத்தில் நண்பர்களுடன் நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம்
மான் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம்

By

Published : Jul 7, 2021, 7:27 AM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் துத்திகுளம் சாலை, மாயமான் குறிச்சி கிராமம் காட்டு பகுதியில் மான்கள், முயல்கள் ஆகியவை உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வள்ளிக்குமார் (30) நேற்று முன்தினம் (ஜூலை 5) இரவு, தனது நண்பர்களுடன் கல்லிடைக்குறிச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் வந்துள்ளார்.

நள்ளிரவு வேட்டை

அவர் ஆலங்குளம் துத்திகுளம் சாலை காட்டுப்பகுதியில் இரவு மான், முயல்களை தேடி வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. துத்திகுளம் சாலை காட்டுப்பகுதியில் பால்ராஜ் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் மிளகாய் பயிரிட்டுள்ளார்.

வேட்டையால் விபரீதம்

காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைத்துள்ளார். நள்ளிரவு காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த வள்ளிக்குமார், பால்ராஜ் தோட்டத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி இறந்த வள்ளிக்குமாரின் சடலம் தென்காசி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிழைப்புக்கு என்ன வழி - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இசைக்கலைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details