தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி - சைக்கிள் திருடும் நபர்

திருநெல்வேலியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

v
சிசிடிவி காட்சி

By

Published : Aug 20, 2021, 10:54 PM IST

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை சந்திப்பில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து நெல்லை சந்திப்பு காவல் துறையினரிடம் விசாரித்தபோது, “திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் சன்னியாசி கிராமத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (ஆக.20) பிற்பகல் திருடியுள்ளார்.

அந்நபர் கையில் பையுடன் வந்து ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்று கவனித்து சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், தற்போது வரை சைக்கிளின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

சிசிடிவி காட்சி

அதே சமயம் சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக சைக்கிள் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளை - திருட்டு கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details