தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தணிக்கைத்துறை அலுவலர் மீது லஞ்சப் புகார் - ஊராட்சி ஒன்றியம்

திருநெல்வேலியில் தணிக்கைத்துறை அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் தணிக்கைத்துறை அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்
தணிக்கைத்துறை அலுவலர் மீது லஞ்சப் புகார்

By

Published : Dec 1, 2021, 5:32 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ளாட்சி துறையானது மாவட்டப் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என மூன்று அடுக்குகளை உள்ளடக்கியது.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு செயல்படும், மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன.

கிராமப் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளரை தவிர, அரசு அலுவலர்கள் கிடையாது என்பதால், ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.

உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை

இந்த ஊராட்சி ஒன்றியங்களின் வரவு செலவு திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டப் பல்வேறு அம்சங்களை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உள்ளது.

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வைத்து தணிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களின் உள்ளாட்சி கணக்குத் தணிக்கை கடந்த 29ஆம் தேதி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து நடந்தது. மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் முகமது லெப்பை, தென்காசி தனித் துறை அலுவலர் உமாசங்கர் ஆகியோர் கணக்குகளைத் தணிக்கை செய்தனர்.

கணக்கில் வராத பணம்
அப்போது தணிக்கையில் சில விஷயங்களை மறைக்க தணிக்கைத்துறை அலுவலர்களுக்கு, அதிக அளவில் பணம் வழங்கப்படுவவதாக நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மெக்கேலரின் எஸ் கால் தலைமையில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 88 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக தணிக்கைக்குழு உதவி இயக்குநர், தணிக்கை ஆய்வாளர்கள், பஞ்சாயத்து செயலர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டில் லஞ்சப் பணம் இருக்கிறதா, பணம் பெற்றதற்கான பிற ஆவணங்கள் இருக்கிறதா என காவல் துறை தீவிர சோதனை நடத்தினர்.

அரசு நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேட்டை அரசுக்கு சுட்டிக் காட்ட வேண்டிய முக்கியப் பொறுப்பு தணிக்கை அலுவலர்களுக்கு உள்ளது. ஆனால், தணிக்கை அலுவலர்களே லஞ்சப் புகாரில் சிக்கிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ராம்குமார் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details