திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீலிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் காவலர்கள் இன்று (ஆகஸ்ட் 16) மூலக்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மூலக்கரைப்பட்டி அருகே செண்பகராமநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் 299 மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 299 மதுபாட்டில்கள் பறிமுதல் - 299 பாட்டில்கள் பறிமுதல்
திருநெல்வேலி: காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை செய்ததில் மூலக்கரைப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 299 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
299 liquor bottles confiscated
இதையடுத்து மதுபாட்டில்கள் அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் யார்?, மது பாட்டில்களைப் பதுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.