சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த கோவிலூர் மலைகிராம மக்கள் சாலை அமைத்துத் தரக்கோரி 30 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்குமுறை சாலையமைக்க பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பாதியிலேயே கைவிடப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை பார்க்கும் மலைக்கிராமம்..! - சேலம் மாவட்ட நிர்வாகம்
சேலம்: 30 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் இருக்கும் கோவிலூர் மலைக் கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக ஈடிவி பாரத் செய்தியில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி சாலை வசதியில்லாமல் இருக்கும் கோவிலூர் கிராாமத்திற்கு சாலை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கோவிலூர் கிராமத்திற்கு செல்லும் பாதையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலை பணி விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மழையை காரணம் காட்டி கடந்த காலங்களை போன்று சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடக் கூடாது எனவும், அப்பகுதி மக்கள் அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.