தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கணவரைக் கொன்று உடலை மறைத்த மனைவி - நடந்தது என்ன..?

சேலத்தில் கணவரை கொன்ற மனைவி, தண்ணீர் ட்ரம்மில் உடலை மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரைக் கொன்று ட்ரம்மில் உடலை மறைத்த கொடூரம்
கணவரைக் கொன்று ட்ரம்மில் உடலை மறைத்த கொடூரம்

By

Published : Dec 25, 2021, 7:24 PM IST

சேலம்: கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சேதுபதி(33). இவர் அதே பகுதியில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தார்.

சேதுபதியின் மனைவி பெயர் பிரியா(30), இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சேதுபதி தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது, மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு(டிச.24) பிரியாவும், ஒரு இளைஞரும் வீட்டிலிருந்து தண்ணீர் ட்ரம் ஒன்றை வெளியே தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். அப்போது அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, தண்ணீர் டிரம்முக்குள் தனது கணவர் உடல் இருப்பதாக பிரியா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் பிரியாவை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து, அடித்து தகராறு செய்ததால், கணவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லால் தாக்கி கொன்றதாகவும், உடலை தண்ணீர் டிரம்முக்குள் அடைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க தலையணை, போர்வையை வைத்து அடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக கிச்சிப்பாளையம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் உடலை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை என்றும், துர்நாற்றம் வீசியதால் வேறு வழியின்றி வெளியே கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

பின்னர் தண்ணீர் டிரமுடன் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து பிரியா அளித்த தகவலின்பேரில், அவரின் ஆண் நண்பரான சதீஷ் என்பவரை கைது செய்து, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:WhatsApp posts: வாட்ஸ்அப் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பாக மாட்டார்: நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details