சேலம்: எடப்பாடியில் இருந்து 50 பயணிகளுடன் திருச்செங்கோட்டுக்கு தனியார் பேருந்து சென்றது. திருச்செங்கோட்டில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் எடப்பாடி நோக்கி தனியார் கல்லூரி பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலை கோழிப்பண்ணை பேருந்து நிலையம் அருகே நேற்று (மே.17) மாலை எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோதிக்கொண்ட இரண்டு பேருந்துகளும் சாலையின் ஓரத்தில் இருந்த மரங்கள் மீது மோதி நின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.