தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தல்; திருநங்கைகள் தற்கொலை முயற்சி - திருநங்கைகள்

சேலம்: பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக திருநங்கைகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி செய்தனர்.

Transgenders suicide attempt
Transgenders suicide attempt

By

Published : Aug 17, 2020, 7:55 PM IST

சேலம் ஐந்து ரோடு பகுதியில் பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்களுடன் இருக்கும் ராதிகா, ரசிகா என்ற திருநங்கைகள் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவர்களின் தாக்குதலுக்கு பயந்து, மூன்று திருநங்கைகளும் இன்று(ஆகஸ்ட் 17) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து பிரகதி, ரம்யா, நிரஞ்சனா மூன்று பேரும் தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, காப்பாற்றி விசாரணைக்காக சேலம் டவுன் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

திருநங்கைகளின் திடீர் தற்கொலை முயற்சியால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சுமார் ஒரு மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

இது தொடர்பாக திருநங்கைகள் கூறுகையில், சக திருநங்கைகள் எங்களை பாலியல் தொழிலில் ஈடுபடும் படி அச்சுறுத்தி, தாக்குதல் நடத்தி கொடூரமான முறையில் நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றி எங்களுக்கு, பாதுகாப்பான வாழ்வு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details