தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக உடல் தகுதித் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடல் தகுதித் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவரும் உடல் தகுதித் தேர்வில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து, 913 பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்வு முழுவதும் வீடியோ பதிவு
நாள்தோறும் 500 பேர்கள் வீதம் பங்கேற்க காவல் துறை சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 500 பேர்கள் இன்று உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.