சேலம்: இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டல செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் அம்பேத்கரின் சிலை கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர், கூண்டுக்குள் இருக்கும் அம்பேத்கரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.