சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நவம்பர் 1ஆம் தேதியன்று பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர் சுபாஷ் சந்திர போஸ் சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 6) அதிகாலை உயிரிழந்தார்.
2017இல் இருந்து தற்போது வரை
தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வினால் முதன்முதலில் 2017ஆம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம் நீட் தேர்வு குறித்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீர் தேர்வைத் தமிழ்நாட்டில் ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதன்பின்னர், வருடாவருடம் நீட் தேர்வு தேதி அறிவிப்பு நாள், நீர் தேர்வு நாள், நீர் தேர்வு முடிவுகள் வரும் நாள் ஆகிய நேரத்தில் எல்லாம் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதை ஆகிவிட்டது. இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக நீர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. நீர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ஏறத்தாழ ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி; நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!