தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் ரவுடிகள் 2 பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது! - Salem Rowdies arrested To Goondas Act

சேலம்: தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட சேலம் ரவுடிகள் இரண்டு பேரைக் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் ரவுடிகள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது.! சேலம் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது.! குண்டர் சட்ட கைது Salem Rowdies arrested To Goondas Act Goondas Act arrest
Salem Rowdies arrested To Goondas Act

By

Published : Feb 27, 2020, 1:31 PM IST

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) எலும்பன் காா்த்திக் (38). குகை, பஞ்சந்தாங்கி ஏரியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (எ) கோவிந்தராஜ் (39) . இவர்கள் இருவர் மீதும் கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் சிறை சென்று திரும்பிய நிலையில், மீண்டும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.

இதைத் தடுக்க, இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து, ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதால், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க 11 தனிப்படை...!

ABOUT THE AUTHOR

...view details