சேலம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ராஜேந்திரன் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி ஏரிக்கரை, மன்னார் பாளையம் பிரிவு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.