சேலம் : சேலத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் அனுமதி இன்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலத்தில் சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு - Salem dye workshops
சேலத்தில் அனுமதியின்றி இயங்கியதாக சாயப் பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
Salem dye workshops
அப்போது உரிய அனுமதி இல்லாமலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் செயல்பட்டு வந்த காமராஜ் சாயப்பட்டறை, குமார், கல்யாணசுந்தரம், வைத்தி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டன.
இதையும் படிங்க : சாயப்பட்டறை இயங்கிவந்த வீட்டின் அறைக்குச் சீல்வைப்பு!