நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள கட்சித்தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணன், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சேலம் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் - நாடாளுமன்றத்தேர்தல்
சேலம்: நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே ஆர் எஸ் சரவணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேஆர்எஸ் சரவணன், "சேலம் நாடாளுமன்றத்தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவேன். தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் உதவியோடு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.
சேலம் நாடாளுமன்றத்தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ அம்மையப்பன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரபு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.