தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கள் இறக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல; தடை விதிக்கும் அரசுதான் குற்றவாளி' - toddy Coordinator of the movement

சேலம்: கள் இறக்கி சந்தைப்படுத்துபவர்கள் குற்றவாளி அல்ல; இதற்கு தடை விதிக்கும் அரசுதான் குற்றவாளி என கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார் .

'கள் இறக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல; தடை விதிக்கும் அரசுதான் குற்றவாளி'
' கள் ' நல்லசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

By

Published : Feb 14, 2021, 8:49 AM IST

சேலத்தில் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர் விவசாய பம்ப் செட்டுகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து கூறிய அவர், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கள் இறக்கியவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் கள் இறக்கி சந்தைப் படுத்துகிறோம். ஆனால் தமிழ்நாடு அரசு மதுவிலக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

கள்ளை போதை பொருள் என்று அரசு நிரூபித்தால் 10 கோடி ரூபாய் வழங்குகிறோம். கள் இறக்குவதும் பருகுவதும் எங்களுக்கான உரிமை. இந்த உரிமையைப் பறித்த தமிழ்நாடு அரசுதான் குற்றவாளி. கள் இறக்குபவர்கள் குற்றவாளி கிடையாது. பிப்ரவரி 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

திட்டமிட்டபடி இந்த அறப்போராட்டம் நடைபெறும். மார்ச் மாதம் 13ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும். இந்த மாநாடு 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மாநாடாக அமையும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னைக்கு ஒரு இனிப்பான செய்தி - பணமில்லாமல் மெட்ரோவில் பயணிக்கலாம் வாங்க!

ABOUT THE AUTHOR

...view details