தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல் - சேலம் சிலிண்டர் வெடிப்பு

சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்து
சேலம் சிலிண்டர் வெடிப்பு விபத்து

By

Published : Nov 25, 2021, 4:38 PM IST

சேலம்: கருங்கல்பட்டியில் நேற்று முன்தினம் (நவம்பர் 23) நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 10 வயது சிறுமி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மு.க. ஸ்டாலின், தனது இரங்கலைத் தெரிவித்ததோடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி விபத்தில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 13 நபர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த நிவாரணத் தொகையான 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று (நவம்பர் 25) நேரில் வழங்கினார்.

இதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'அவர்களைச் சக மனிதராகப் பாருங்கள்!' - பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

ABOUT THE AUTHOR

...view details