தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம் - Salem news

சேலம், அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி பகுதியில், பொருளாதார நிலையில் நலிவடைந்த குழந்தைகள், பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம், சத்துணவு, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள், சேலம் டான் போஸ்கோ அன்பு இல்லம் சார்பாக வழங்கப்பட்டது.

பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

By

Published : Aug 3, 2021, 6:04 AM IST

சேலம்: அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியில் நலிவடைந்த குழந்தைகள், பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம், சத்துணவு, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சேலம் ரோட்டரி கிளப் வழங்கிய உதவிகள் மூலமாக, சேலம் டான் போஸ்கோ அன்பு இல்லம் நடத்திய இந்நிகழ்வில் ஏறத்தாழ 60 குழந்தைகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

மொத்தம் 150 குழந்தைகளுக்கு மூன்று சுற்றுகளாக நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் முதல் படியாக இன்று (ஆக. 02) 60 குழந்தைகளுக்கு நிவாரண உதவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

1000 பேருக்கு உதவிகள்

இதுபற்றி கூறிய டான் போஸ்கோ அன்பு இல்ல இயக்குநர் கஷ்மீர், "சேலம் பகுதியிலுள்ள நலிவடைந்த குழந்தைகள் 1000 பேருக்கு உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக சென்ற வாரம் கூட்டுறவு சங்கம் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியில் இது தொடர்கிறது. மேலும், கரோனா தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய வகையில் கடைபிடிக்கப்படுகிறது" என்று கூறினார்.

சேலம் ரோட்டரி கிளப், சேலம் ஸ்டோர்ஸ், மருத்துவர் விஜயன் ஆகியோர் இந்நிகழ்வுக்கு தேவையான பொருள்களுக்கு உதவி புரிந்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வை குழந்தை நேய சேலம் அமைப்பு சேலம் டான் போஸ்கோ அன்பு இல்லம் ஒருங்கிணைத்து நடத்தியது. இப்பகுதியில் சென்ற வருடம்முதல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு குழந்தைகளுக்கு சிலம்பம் வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ'

ABOUT THE AUTHOR

...view details