தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் துறையினரின் தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம் - சேலம்

சேலத்தில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (மார்ச்.31) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

police postal votes polling started in salem, காவல்துறையினரின் தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
police postal votes polling started in salem

By

Published : Mar 31, 2021, 1:37 PM IST

சேலம் மாவட்டக் காவல் துறை சார்பில் வெளி மாவட்டங்களில் பணியாற்றிவரும் 337 பேர் உள்பட 1,773 பேர் தங்களின் வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்து வருகின்றனர். சேலம் மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த 1,482 பேரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 290 பேரும் இன்று (மார்ச்.31) வாக்களிக்கின்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தனித்தனியே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி கொண்டலாம்பட்டி பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details