சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குவது சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு. இங்கு காபி தோட்டங்கள் பல்லாயிரம் ஏக்கரில் அமைந்துள்ளன. இங்கு விளையும் காபி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதேபோல ஏற்காடு சுற்றியுள்ள மலை கிராம பகுதிகளில் மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை ஆகிய வாசனை பொருட்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. பலா, ஆரஞ்சு, அத்திபழம், பட்டர் ஃப்ரூட், மலை வாழை உள்ளிட்ட பழ வகைகளும் ஏற்காடு பகுதிகளில் விளைகின்றன. வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறு தானிய வகைகளையும் சேர்வராயன் மலைத் தொடர் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்குவது சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு தற்போது தென்மேற்கு பருவமழை ஏற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதனால் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், பக்கோடா முனை, மஞ்சகுட்டை காட்சி முனை, ரோஸ் கார்டன், அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு இந்நிலையில் ஏற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து உள்ளதாக, காவல்துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. இதனையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக ஏற்காடு காவல் துறை அலுவலர்கள் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம் போல் தொடர்ந்து வருகிறது. அதேபோல ஏற்காடு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளை முழுமையாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம் என்றனர்.
ஏற்காட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றனர் - பொதுமக்கள் புகார் தொடர்ந்து பேசிய அலுவலர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லாட்டரி விற்பனை, போதை பொருட்கள் விற்பனை நடக்கின்றனவா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விடுதிகளில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசாருக்கு அந்தந்த நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்கள் மீதும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், தனியார் காபி எஸ்டேட் பகுதிகளில் இருந்து விதிகளுக்கு புறம்பாக சில்வர் ஓக் மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அதிக அளவில் லாரிகளில் கொண்டுச் செல்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. அதுபோல் விதிகளுக்கு புறம்பாக அதிக அளவில் சில்வர் ஓக் மரங்களை எடுத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.