தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புல்லட்-ஐ ஓட்டிப் பார்ப்பதுபோல், ஓட்டிச் சென்ற காதல் ஜோடி! - குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை

சேலத்தில் புல்லட்-ஐ ஓட்டிப் பார்ப்பதுபோல் ஓட்டிச் (திருடிச்) சென்ற காதல் ஜோடியை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

வலைவீச்சு
வலைவீச்சு

By

Published : Jan 23, 2022, 4:48 PM IST

Updated : Jan 23, 2022, 10:34 PM IST

சேலம்: திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஓட்டிப்பார்த்து விட்டு வாங்கிக் கொள்வதாக கூறி, டூவிலர் மற்றும் ஆட்டோவுடன் எஸ்கேப் ஆவார். அதே பாணியில் இந்த ஜோடியும் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்குச் சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் ஷோரூம் ஒன்று உள்ளது.

ஓட்டிப் பார்க்க ஆசை

இந்த ஷோரூம் கடைக்கு ஜன.21ஆம் தேதியன்று (வெள்ளி) இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர். ஒரு புல்லட் பைக் வாங்க வந்திருப்பதாகக் கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த டுவீலர்களை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டனர்.

இதில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள ஒரு டுவீலரை தேர்வு செய்து, அதை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்து கொண்டு ஜோடியாக சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை.

ஓட்டம் பிடித்த ஜோடி

நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைப்பேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் ‘அவர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது' என்றும் 'நாங்கள் தனியாக வந்துள்ளோம்' என்றும் கூறியுள்ளனர்.

புல்லட்டு வாங்க வந்த காதல் ஜோடி, புல்லட்டுடன் ஓடியதால் பரபரப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடை உரிமையாளர் ராம்பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கடையிலிருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளைப் பார்த்து, இரண்டு ஜோடிகளுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையிலிருந்த இன்னொரு ஜோடியை பிடித்து நகர குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை

காவல்துறை விசாரித்தபோது, வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் எங்களுக்குத் தெரியும் எனப் பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர். அதன்பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் நகர குற்றப்பிரிவு காவல்துறை பிரிவிற்கு வந்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற இளைஞர் கிருஷ்ணகிரி குப்பத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது.

வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு காவல்துறை, வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியைத் தேடி வருகின்றனர் .

இதையும் படிங்க: என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Last Updated : Jan 23, 2022, 10:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details