சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், ஆடுகள் வளர்ப்பு கொட்டகை, கழிப்பறை கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்டவை அடக்கம்.
ஓமலூர் வளர்ச்சி திட்டப் பணிகள் - எம்.பி. பார்த்திபன் நேரில் ஆய்வு! - Salem MP S. R. Parthiban
சேலம்: ஓமலூர் வட்டார வளர்ச்சி திட்டப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் இன்று(அக்.12) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.பி. பார்த்திபன் நேரில் ஆய்வு
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் இந்தப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். அதையடுத்து அவர் பொதுமக்கள் கூறும் புகார்களை கேட்டறிந்தார். மேலும் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆளும் கட்சி மோசடி செய்துள்ளது - பார்த்திபன் எம்பி