சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பிருந்தாவனம் நகர குடியிருப்புப் பகுதிகளில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மா, பலா, நெல்லிக்காய், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.