தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உடல் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! - பெண் சடலம்

சேலம்: சத்திரம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில், பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த நிலையில் பெண் சடலம்

By

Published : Jul 23, 2019, 7:39 AM IST

சேலம் சந்திப்பு தொடர்வண்டி நிலையத்திலிருந்து, நகர நிலையத்திற்குச் செல்லும் பாதையிலுள்ள தண்டவாளத்தில், நேற்று காலை 7 மணியளவில் பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் அலறிக்கொண்டு இருந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், உடனே செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, எரிந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்தப் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பெண்ணின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

அப்போது அந்தப் பெண்ணின் பெயர் பச்சியம்மாள் என்பதும், வயது 63 என்றும், சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், பச்சியம்மாளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த பச்சியம்மாள் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து சத்திரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகில் படுத்துக்கொண்டு, உடலுக்கு தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details