சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 412 பேர் வேட்புமனு தாக்கல் - Salem 11 legislature vol
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்றுடன் (மார்ச் 19) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 412 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் சட்டப்பேரவைத் தொகுதி
By
Published : Mar 20, 2021, 12:57 PM IST
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதிமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
நேற்றுடன் (மார்ச் 20) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 412 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் 11 சட்டப்பேரவைத் தொகுதி
சேலம் தொகுதி
வேட்புமனுத் தாக்கல்
கெங்கவல்லி (தனி)
24
ஆத்தூர் (தனி)
21
ஏற்காடு (எஸ்.டி.)
24
ஓமலூர்
38
மேட்டூர்
73
எடப்பாடி
48
சங்ககிரி
35
சேலம் மேற்கு
39
சேலம் வடக்கு
36
சேலம் தெற்கு
39
வீரபாண்டி
35
மொத்தம்
412
இதில், நாளை (மார்ச் 21) வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.