நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு: தீவிரமடையும் விசாரணை! - நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு
சேலம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், இன்று சேலத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே செவிலி அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை ஓட்டுநர் முருகேசன், தரகர் அருள்சாமி பெங்களூருவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரேகா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாகச் சேலம் அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று காலை முதலே தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டு, மருத்துவமனை ஊழியர்களிடம் குழந்தை விற்பனை தரகர்கள் யாரும் உள்ளனரா? அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினர்.