தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் சட்டப் பாடங்கள்: சேலம் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பேச்சு - 24th convocation day of salem central law college

மேல்நிலை பள்ளி மாணவர்களும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பெறும் வகையில் பாடத்திட்டத்தில் சட்ட பாடங்கள் இணைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலம் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

minister ragupathy at salem central law college convocation
சேலம் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா

By

Published : Jan 4, 2022, 11:30 AM IST

சேலம்: ஏற்காடு பிரதான சாலையில் இயங்கி வரும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 24ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் அவர் கூறியதாவது, ”பொது மக்களுக்கான சட்ட அறிவிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர்கள் பொதுமக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

சேலம் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா

மேல்நிலை கல்வியிலேயே சட்ட வடிவங்களை பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது‌. அக்கோரிக்கையும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, விரைவில் இதற்கான அறிவிப்பு வரும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Cultural Revolution Madurai: நன்னெறியில் வாழ்வோருக்கு அந்தணர் பட்டம் - மதுரையின் பண்பாட்டுப் புரட்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details