தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணல் ஏற்றி வந்த லாரி 50 அடி கிணற்றில் விழுந்து விபத்து! - salem

சேலம்: அழகாபுரம் பகுதியில் கட்டுமான பணிக்காக மணல் ஏற்றி வந்த லாரி, 50 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

lorry

By

Published : Mar 30, 2019, 6:31 PM IST

சேலம் அழகாபுரம் பகுதியில் கட்டுமான பணிக்காக ஓமலூரில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி, ஓட்டுநர் மணியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியை ஓட்டி வந்த மணி என்பவர் லாரியை விட்டு வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் காவல்துறையினர் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



ABOUT THE AUTHOR

...view details