சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அழிவு திட்டங்கள் குறித்து அரசு இரட்டை வேடம் - கி. வீரமணி காட்டம்! - ki veeramani slams tamilnadu govt
சேலம்: ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார்.
கீ வீரமணி
அப்போது பேசிய அவர்,
அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!
- நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
- சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
- ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது கேலி கூத்தாக உள்ளதாகவும், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது என்று கூறினார்.
- ரஜினி பேசியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், அவ்வழக்கைச் சந்திக்க அவர் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.