தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு

சேலத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்குத் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

By

Published : Dec 25, 2021, 9:31 AM IST

சேலம்:கரோனா ஊரடங்கிற்குப் பின்பு அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன‌. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி முன்னிலையில் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரகுபதி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

இதில் அனைத்து வாகனங்களிலும் அவசரகால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, வாகனங்களின் தரம் குறித்தும் அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. இந்த ஆய்வில் தரமில்லாத மூன்று வாகனங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

இதனையடுத்து பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்குத் தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்பு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:Honour killing: ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும்: மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details