தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் போலி வருவாய் அலுவலர் கைது! - சேலம் மாவட்டம், பி.நாட்டாமங்கலம்

சேலம்: மாவட்ட வருவாய் அலுவலர் என்ற பெயரில் வலம் வந்த போலி அலுவலரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் போலி வருவாய் அதிகாரி கைது!
சேலத்தில் போலி வருவாய் அதிகாரி கைது!

By

Published : Feb 5, 2021, 3:32 PM IST

சேலம் மாவட்டம், பி.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(40). இவர், ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருவதாகவும், தனது காரை தனியார் நிதிநிறுவனமான ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாகவும், அந்த காரில் அரசு ஆவணங்கள் உள்ளதால் அதனை மீட்டு தரும்படி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் புகாரளித்த மூர்த்தி என்பவர் அரசு அலுவலரே இல்லை என்பதும், தனது காரில் அரசு முத்திரையை பயன்படுத்திகொண்டு வலம் வந்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மூர்த்தியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சேலத்தில் உலகப் புற்றுநோய் நாள் அனுசரிப்பு

ABOUT THE AUTHOR

...view details