தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இது கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத் திணிப்பு - எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து ஊடகங்கள் நடத்தியது கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத் திணிப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

exit poll result is not correct one -TN CM Edappadi Palanisamy

By

Published : May 20, 2019, 11:53 AM IST


சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2016ஆம் ஆண்டும் இதே ஊடகங்கள்தான் கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அப்போது சேலத்தில் மூன்று இடங்களில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெறும் என ஒட்டுமொத்த ஊடகங்களும் கருத்துக் கணிப்பு வெளியிட்டன. ஆனால் வாக்கு எண்ணிக்கையில், சேலத்தில் மட்டும் அதிமுக பத்து தொகுதிகளைப் பிடித்தது எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தமிழ்நாட்டில் 38 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், ஊடகங்கள் நடத்திய இது கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத் திணிப்பு என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details