தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எர்ணாகுளம்-பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 30 அன்று மாற்றுப்பாதையில் இயங்கும் - Ernakulam-Bangalore Intercity Special train

சேலம்: எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி சிறப்பு ரயில் மார்ச் 30ஆம் தேதியன்று, சேலம்-பெங்களூரு இடையே திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி சிறப்பு ரயில்
எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி சிறப்பு ரயில்

By

Published : Mar 18, 2021, 9:20 PM IST

எர்ணாகுளம்-ஓமலூர்-மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்கு லைன் பிளாக் காரணமாக, பெங்களூரு இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (ரயில் எண் 02678) இயக்கப்படுகிறது.

தென்னக ரயில்வே அறிவிப்பு

இச்சிறப்பு ரயில், மார்ச் 30ஆம் தேதியன்று, சேலம்-பெங்களூரு இடையே திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும்.

தென்னக ரயில்வே

வழக்கமாக தர்மபுரி, ஒசூர், கார்மேலரம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை, மேம்பாட்டுப் பணி காரணமாக மார்ச் 30ஆம் தேதியன்று கிருஷ்ணராஜபுரம் திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும்.

மார்ச் 30 செவ்வாய்க்கிழமையன்று தர்மபுரி, ஒசூர், கார்மேலரம் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களை, இந்த ரயில் தவிர்க்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details