தருமபுரி :தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக, பாமக உறுப்பினர்கள் கடந்த எட்டு மாதங்களாக நிதி ஒதுக்கப்படமால் உள்ளதாகவும், நிதி இல்லாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முடியவில்லை என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.
ஏரியூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பேசும் போது, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருவதாகவும், தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க நிதி ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.