தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் புதிய கண்டுபிடிப்பு! - student innovate new machine to fight locust

விவசாய்த்தை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை அழிக்க புதிய கருவியைக் கண்டுபிடித்து சேலம் பொறியியல் மாணவர் அசத்தியுள்ளார்.

வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் கண்டுபிடிப்பு!
கண்டுபிடிப்பை செயல்படுத்தும் பாங்கில் மாணவர் உதயகுமார்

By

Published : Jun 5, 2020, 9:42 PM IST

Updated : Jun 5, 2020, 11:05 PM IST

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (19). பொறியியல் கல்லூரி மாணவரான இவர், பல்வேறு புதிய வகை கருவிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

தற்போது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் விவசாய விளைப்பொருள்களை அழித்துவருவதைக் கேள்விப்பட்ட உதயகுமார், அவற்றை அழிப்பதற்கு கருவி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் கண்டுபிடிப்பு!

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திக்கு உதயகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில், "சிறுவயது முதலே புதிய புதிய கண்டுபிடிப்புகளை செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதனால் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்து, தற்போது மூன்றாம் ஆண்டு படித்துவருகிறேன்.

வெட்டுக்கிளிகள் இந்திய விவசாயத்திற்கு தற்போது பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் தமிழ்நாடு வந்தால் அவற்றை அழிப்பதற்கு ஒரு புதிய கருவியை 12,000 ரூபாய் செலவில் கண்டுபிடித்து உள்ளேன்" என்றார்.

கண்டுபிடிப்பை செயல்படுத்தும் பாங்கில் மாணவர் உதயகுமார்
தொடர்ந்து தன்னுடைய கண்டுபிடிப்பைப் பற்றி பேசிய அவர், "இது மிக எளிதான கண்டுபிடிப்பு. ஒரே நாளில் இந்தக் கருவியை வடிவமைப்பு செய்தேன். இந்தக் கருவியில் உள்ள குண்டு பல்பு மூலம் அதிகத் திறன்கொண்ட வெளிச்சம் வெளியேறும். அது வெட்டுக்கிளிகளை ஈர்த்து வெகு எளிதாக அந்த வெளிச்சம் அவற்றைக் கொன்றுவிடும். இதேபோல ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து அல்லது ஆறு கருவிகளை வைத்தால் போதும். ஒரே நாளில் மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் செத்து மடியும்.
வெட்டுக்கிளி படையெடுப்பை வேரறுக்கும் கண்டுபிடிப்பு!
இதனால் தமிழ்நாடு விவசாய விளைப்பொருள்களை அழிவிலிருந்து காப்பாற்றலாம். இந்தக் கருவிகளை உருவாக்கும் முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் வெட்டுக்கிளி படையெடுப்பை தமிழ்நாட்டில் தடுத்துவிடலாம்" என்றார். வெட்டுக்கிளி படையெடுப்பால் கதி கலங்கி வரும், விவசாயிகளை மீட்டெடுக்கும் உதயகுமாரின் இந்தக் கண்டுபிடிப்பானது நிச்சயம் பாராட்டுக்குரியதே!
Last Updated : Jun 5, 2020, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details