தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உருண்டு விழுந்த பாறைகள் - தடம் புரண்ட ரயில் பெட்டிகள் - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி - சேலம் ரயில் பாதையில் முத்தம்பட்டி அருகே மழை காரணமாக பாறைகள் உருண்டு ரயில்பாதையில் விழுந்ததில் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

மழையால் பாறைகள் உருண்டு  7 பெட்டிகள் தடம் புரண்டன
தருமபுரி - சேலம் ரயில்

By

Published : Nov 12, 2021, 10:05 AM IST

Updated : Nov 12, 2021, 11:48 AM IST

தருமபுரி: கனமழையால் தருமபுரி - சேலம் ரயில் பாதையில், முத்தம்பட்டி அருகே மழையின் காரணமாக பாறைகள் உருண்டு ரயில் பாதையில் விழுந்தன.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

கண்ணூர் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தருமபுரி - சேலம் ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்தது. தொப்பூர் சிவாடி ரயில் பாதையில் இன்று நவ.12 ஆம், தேதி அதிகாலை 3:30 மணி அளவில் சென்ற போது ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் அந்த ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டன.

இதையடுத்து, உடனடியாக சேலம் ரயில்வே கோட்டத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயிலில் பயணம் செய்தவர்கள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.

ரயில் பயணிகளுக்கு பேருந்து வசதி

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில், 7 பெட்டிகளில் இருந்த பயணிகள் திருப்பத்தூர் வழியாக செல்லும் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

மேலும், தடம் புரண்ட 7 பெட்டிகளை மீட்கும் பணியில், பெங்களூர் ரயில்வே கோட்ட பணியாளர்கள் மற்றும் சேலம் கோட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


மாற்றுப்பாதையில் இயக்கம்

பெங்களூரு - சேலம் ரயில் பாதையில் செல்லும் பெங்களூர் - எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், நாகர்கோவில் - பெங்களூரு சூப்பர் பாஸ்ட் ஸ்பெஷல் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கவும், சேலம் - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: TN Weather Update: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

Last Updated : Nov 12, 2021, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details