சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான ரோகிணி தலைமை தாங்கினார்.
கல்லூரி மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி! - ரோகிணி
சேலம்: மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கு வாக்களர்களுக்கு விழிப்புணர் குறித்தான விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
slm
பின்னர் அவர் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். இதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் அனைத்து பணிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் இளைய சமுதாயத்தினர் அனைவரும் வரும் ஏப்ரல் 18ம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.