தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இயற்கை மருந்துகள் - அறிமுகம் செய்தார் ஆட்சியர் - சேலம் மாவட்டச்செய்திகள்

சேலம்: கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சோனா ஆயுஷ் மையத்தின் இயற்கை மருந்துப் பொருள்களை சேலம் மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப். 28) அறிமுகம் செய்துவைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர்

By

Published : Apr 28, 2021, 7:04 PM IST

Updated : Apr 28, 2021, 7:23 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இயற்கை மருந்துப் பொருள்கள் அறிமுக நிகழ்ச்சியில் சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகி வள்ளியப்பா, சோனா கல்வி குழும முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சோனா ஆயுஷ் மையம்

சேலத்தில் இயங்கிவரும் பிரபல கல்வி நிறுவனமான சோனா கல்வி குழுமத்தின் சார்பில் ஆயுஷ் மையம் செயல்பட்டு வருகிறது.

இதில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை சூப் பவுடர், மிளகு, செறிவூட்டப்பட்ட மலைத்தேன், நீராவி குளியல் பவுடர் ஆகியவற்றை கரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உதவும் வகையில் இன்று (ஏப். 28) அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர்

இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி நோயில்லா வாழ்க்கையை வாழலாம் என்று சோனா கல்லூரியில் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர்
Last Updated : Apr 28, 2021, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details