தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"முதலமைச்சராகும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது நீங்கள் தான்" - உருகிய எடப்பாடி! - எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

function

By

Published : Aug 19, 2019, 8:02 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ், 400 பயனாளிகளுக்கு 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய முதலமைச்சர், " திருச்செங்கோடு - ஓமலூர் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்காக நிலம் கையகப்படுத்தவற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண்பதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் தீர்க்கக் கூடிய வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு முன்பு எடப்பாடி தொகுதி எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மக்கள் தான் எனக்கு முதலமைச்சராகும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர்கள்" என உருக்கமாக தெரிவித்தார். இந்த விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details