தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலத்தில் 5,000 கோடி முதலீட்டில் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சிஐஐ அறிவிப்பு - employment for 40 thousand people in Salem

சேலத்தில் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளதாகவும், அவற்றின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சிஐஐ சேலம் மண்டலத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

salem cii meeting, 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு சிஐஐ அறிவிப்பு, சேலத்தில் 5000 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள்,
salem cii meeting

By

Published : Dec 17, 2021, 10:31 PM IST

சேலம்: இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (சிஐஐ) சேலம் மண்டலம் சார்பில் சேலத்தில் இளம் தொழில் முனைவோருக்கான ஒருநாள் கருத்தரங்கு இன்று (டிச.17) நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வழித்தடத்தை (டிபென்ஸ் காரிடார்) ஒட்டி தொழில் கூட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

அதன் பின் கருத்தரங்கின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சிஐஐ சேலம் மண்டலத்தின் தலைவர் வேல் கிருஷ்ணா கூறுகையில்," சேலம் மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாகத் திகழ்கிறது. பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்மாதிரியான திட்டங்களை அறிவித்து தொழில் நிறுவனங்கள் அமைத்திட வேலை வாய்ப்புகளை பெருக்கிட ஊக்கம் கொடுத்து வருகின்றன.

40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு - சிஐஐ அறிவிப்பு

இந்த நிலையில் மத்திய அரசால் சேலத்திலிருந்து சென்னைக்குப் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தை ஒட்டி சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிடத் தொழில் முனைவோர் முன்வரவேண்டும்.

மேலும், அவர்களுக்கான வழிகாட்டும் வகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் சேலம் மண்டலத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் அமையும். அவற்றின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக ஆட்சி 2024இல் முடிவுக்கு வரும்! - எடப்பாடி பழனிசாமி

'கள்ளச்சாராயத்துக்கு கதர் வாரியம், கட்டப்பஞ்சாயத்துக்கு அறநிலை, நீர் தராதவருக்கு நீர்வளம்!'

ABOUT THE AUTHOR

...view details