தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாடாளுமன்றத் தேர்தலுக்காக துணை ராணுவப்படையினர் சேலம் வருகை ! - parliamentary elections

சேலம்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 92 துணை ராணுவப் படைவீரர்கள் சேலம் வந்தடைந்தனர்.

slm

By

Published : Mar 15, 2019, 10:21 PM IST

துணை ராணுவப்படையினர் சேலம் வருகை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலத்தில் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 92 துணை ராணுவப் படைவீரர்கள் சேலம் வந்தடைந்தனர். ரயில் மூலம் சேலம் வந்த துணை ராணுவ படையினர் இரும்பாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் எவ்வித அச்சுறுத்தலுக்கு இடம் கொடுக்காத வகையில் தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் உதவியோடு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு மாவட்டங்களுக்கும் துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் முழு முனைப்போடு செய்து வருகிறது. இதன்முதற்கட்டமாக 92 துணை ராணுவ படை வீரர்கள் மதியம் 4 மணியளவில் ரயில் மூலம் சேலம் வந்தனர்.


ABOUT THE AUTHOR

...view details