சேலம்:களவாணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இதனிடையே நடிகை ஓவியா தனது 31ஆவது பிறந்தநாளை சேலத்தில் கொண்டாடினார். தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போது மாணவர்களுடன் கேக் வெட்டி ஆரவாரத்துடனும், ஆட்டம்பாட்டத்துடனும் உற்சாகமாக கொண்டாடினார்.
'ஓ சொல்றியா மாமா..' பாடலுக்கு நடனம்:அப்போது மேடையில் 'ஓ சொல்றியா மாமா..' உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இதனை ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் ஆரவாரத்துடன் கைதட்டியும் விசிலடித்தும் கொண்டாடினர்.
ஒரே சம்பளம்: தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை போலவே நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தக் காலத்தில் சம உரிமை இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும். ஆண்-பெண் சமம் என்ற உணர்வை சிறுவயதிலிருந்து கொண்டு வரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்