கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நடவடிக்கையால் சேலத்தில் உள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இதனால் சேலத்தில் உள்ள ஆதரவற்றவர்கள் உணவு பெற வழியின்றி தவித்தனர். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபருமான கண்ணன் சாலையோரங்களில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களின் பசியைப் போக்கினார்.
ஆதரவற்றோருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்கள் சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இவர் தனி வாகனத்தில் உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்று ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களைத் தேடி வழங்கினார்.
ஊரடங்கில் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயர் ஊரடங்கு நேரத்திலும் தேடிவந்து உணவளித்த அவருக்கு ஆதரவற்ற மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: 'நாளை நடக்கவிருக்கும் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை'