சேலம்:சேலம் மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி வனப்பகுதியில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் இன்று (மார்ச் 28) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டுப்பன்றியை வேட்டையாடி, வெட்டிக்கொண்டிருந்த மூன்று பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஓமலூர் தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ராமசாமி மற்றும் மூர்த்தி என்பதும், மூன்று பேரும் இலந்தை மரத்து ஓடை பகுதியில், இரும்புக் கம்பிகள் மூலம் கண்ணி வைத்து 20 கிலோ எடையுள்ள ஆண் காட்டுப்பன்றியை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது.