தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜபக்சவுக்கு அளிக்கப்படும் வரவேற்பு, தமிழர்களை காயப்படுத்தும் செயல்: திருமாவளவன் - கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு

மதுரை: இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பு கொடுத்து, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

By

Published : Nov 23, 2019, 11:58 PM IST

மதுரை தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், “உள்ளாட்சித்தேர்தலில் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க அவசரச்சட்டம் இயற்றிருப்பது தேர்தலுக்குப் பிறகு கவுன்சிலர்களை கடத்திச்செல்வதற்கும், குதிரைப்பேரம் நடத்துவதற்கும், ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பதால் மேயர் சுகந்திரமாக செயல்பட முடியாது. கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டில் தான் மேயர் இருக்க முடியும். இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

கோத்தபய ராஜபக்சவும், அவரது குடும்பம் மீதும் இனப்படுகொலை குற்றஞ்சாட்டு உள்ளது. இலங்கைத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பன்னாட்டு விசாரணை கோரும் நேரத்தில், ராஜபக்ச குடும்பத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள சூழலில் இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபக்ச வருகையை இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

மகாராஷ்டிராவில் மதச்சார்பற்ற, மதச்சார்பின்மை அரசு ஏற்பட வாய்ப்பிருந்த நேரத்தில் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது இந்திய அரசியலில் எவ்வளவு கடினமானது என்பதை மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த போக்கு காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details