மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரின் சிலைக்கு இன்று (அக். 30) பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து மரியாதை
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "நான் சிறைப்பட்டிருந்த ஆண்டுகள் தவிர, கடந்த 46 ஆண்டுகளாக முத்துராமலிங்கத் தேவருக்கு தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறேன். முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை தலைவராக ஏற்றுக் கொண்டவர்.
முத்துராமலிங்கத் தேவரின் சிலை மரியாதை செலுத்திய வைகோ அதுமட்டுமன்றி, ஒழுக்க சீலராக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். அவரது ஜெயந்தி நாளை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்பதே வேண்டுகோள்" என்றார்.
இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் 114வது பிறந்த நாள் - முதலமைச்சர் புகழாரம்..!