பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி தயாரித்து, மதுரை மாநகர் பகுதியில் சிலர் விற்பனை செய்து வருவதாகவும், இதனால் நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும், அந்தந்த நிறுவனங்களின் மேலாளர்கள் மதுரையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பீடி உற்பத்தி - இருவர் கைது!
மதுரை: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் அதிரடியாக சோதனை செய்த அமலாக்கப் பிரிவு காவல்துறை போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, டேனியல் அமல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காசிராஜன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
போலியாக பீடி தயாரிக்கும் சம்பவம், மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.